ஸ்ரீ வடிவேலன் ஸ்டோர்ஸ் தன்னுடைய புது அடையாளத்தை மூன்று வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது, மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதை மெருகேற்றி, முழுமையாக எங்களுடைய தனித்துவமிக்க ஒரு அடையாளத்தை இப்பொழுது அறிமுகம் செய்கிறோம். இந்த அடையாளத்தைப் போலவே, இனி எங்களுடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் எங்களுடைய தனித்துவத்தை நாங்கள் காட்ட முயல்வோம். கடந்த கால பிழைகள் ஏதேனும் இருப்பின், அதை அனைத்தையும் திருத்திக்கொண்டு, நிறைவான சேவைகளை தொடர்ந்து எங்களுடைய மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முயல்வோம். எங்களுடைய ஒரே பணிவான வேண்டுகோள், எங்களுக்கான தங்களுடைய ஆதரவானது என்றும் நிலைத்துநிற்க வேண்டுமென்பது மட்டுமே. அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்ள தயாராய் உள்ளோம்.